Published : 08 Dec 2020 12:46 PM
Last Updated : 08 Dec 2020 12:46 PM

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு: மாதாந்திர உதவித்தொகை ரூ.750

சென்னை திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஐடிஐ-யில் காலியாக உள்ள பிரிவுகளில் சேர 12.12.2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இசைமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (கிண்டி) மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Electornics Mechanic, Technical Medical Electronics ஆகிய தொழிற் பிரிவுகளில் மாணவர்களின் நேரடி சேர்க்கைக்கு 12.12.2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் நேரடியாக அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வந்து சேரலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், சேர்க்கைக் கட்டணமாக ரூ.195-ம் செலுத்த வேண்டும்.

இத்தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மடிக்கணினி, மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, தையல் கூலியுடன் சீருடை 2 செட் மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் என விலையில்லா சலுகைகள் வழங்கப்படுகிறது.

பயிற்சி முடிவில் மத்திய, மாநில அரசின் சான்றிதழ்களும் மற்றும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 044-22504990-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இசைமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x