Last Updated : 25 Nov, 2020 02:16 PM

 

Published : 25 Nov 2020 02:16 PM
Last Updated : 25 Nov 2020 02:16 PM

புயல் பாதிப்பு: வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வுத் தேதிகள் நீட்டிப்பு

நிவர் புயல் பாதிப்பு காரணமாக வேளாண்மைப் படிப்புகளுக்கான கலந்தாய்வுத் தேதிகளை நீட்டித்து, வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் எம்.கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''நிவர் புயல் பாதிப்பால் இணையதளம் மற்றும் போக்குவரத்து இடையூறு காரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கைத் தேதி, நவ.26 முதல் டிச.1-ம் தேதி வரை 6 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை இணையதளக் கலந்தாய்வு அட்டவணை:

நவ.26 முதல் டிச.1-ம் தேதி வரை பொதுப்பிரிவுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. நவ.30 மற்றும் டிச.1-ம் தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறும். டிச2-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படும். டிச.7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தினந்தோறும் 600 பேர் வீதம், அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நேரடியாக நடைபெறும்.

டிச.15-ம் தேதி நகர்வு முறையில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படும். டிச.21 முதல் 24 வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். டிச.29 மற்றும் 30-ம் தேதிகளில் தொழில் நிறுவனத்தினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் கலந்தாய்வு நடைபெறும்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x