

விஜயதசமி அன்று ஏதேனும் ஒரு கலையைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ உடன் இணைந்து ‘கிரியேட்டிவ் வித்யாரம்பம்’ எனும் வடிவமைப்பு மற்றும் கலைக்கான ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை வரும் அக்.26-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.00 மணிக்கு நடத்துகிறது. இதில், பல்வேறு வல்லுநர்கள் பங்கேற்று, பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், அசோக் லேலண்ட் வடிவமைப்புத் தலைவர் ஜி.சத்யசீலன், ‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ கலை ஆய்வுத் தலைவர் வி.தட்சிணாமூர்த்தி, கலாச்சார பாரம்பரிய ஓவியக்கலைஞர் மார்க் ரத்தினராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பயிற்சியளிக்க இருக்கிறார்கள்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் 2 முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ‘உங்கள் குழந்தையின் முதல் ஓவியம்’ எனும் தலைப்பிலும், 5 முதல் 8 வயது உள்ளவர்களுக்கு ‘நூல் ஓவியம்’ எனும் தலைப்பிலும், 9 முதல் 13 வயது வரையுள்ளவர்களுக்கு ‘காகிதக் கலை’ எனும் தலைப்பிலும், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ‘தஞ்சாவூர் பொம்மை (த்ரீ டி மாடல்)’ எனும் தலைப்பிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.99/- ஜிஎஸ்டி. இதில் பங்கேற்க http://connect.hindutamil.in/event/65-vidhyarambam.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 9791605238, 9003196509 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளவும்.