ஜேஇஇ தேர்வு நாளை தொடக்கம்

ஜேஇஇ தேர்வு நாளை தொடக்கம்
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலை தேர்வு, ஜேஇஇ பிரதான தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வு செப் 1-ம் தேதி (நாளை) தொடங்கி 6-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53,473மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 பேர் எழுதுகின்றனர்.

ஹால் டிக்கெட்டில் கூறப்பட் டுள்ள வழிமுறைகளை மாணவர் கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in