Last Updated : 24 Aug, 2020 03:27 PM

 

Published : 24 Aug 2020 03:27 PM
Last Updated : 24 Aug 2020 03:27 PM

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரொக்கம்: புதுவையில் விரைவில் விநியோகம்

புதுச்சேரி

புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி, ரொக்கத்தொகை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசியும், உணவுப்பாதுகாப்பு ஊக்கத்தொகையும் வரும் வாரத்திலிருந்து வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் (மதிய உணவு) தனசெல்வம் நேரு அனைத்துப் பள்ளி தலைமைக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

''1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் 4 கிலோ அரிசி மற்றும் வகுப்புகள் வாயிலாக ரூ.290 முதல் ரூ.390 வரை ரொக்கமாக வழங்கப்படும். பள்ளிகளில் அரிசி மற்றும் ரொக்கத்தொகை வழங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்குப் பள்ளியில் மானியத்தைப் பயன்படுத்தி சானிடைசர் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டை பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் கொண்டுவர வேண்டும்.

மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரொக்கத்தொகை வழங்கிய பிறகு, அதன் விவரங்களைக் கணக்கெடுப்புத் தாளில் குறித்துக் கொள்ள வேண்டும். மேலும், மாணவர்களிடம் உள்ள சாதனங்கள் (தொலைக்காட்சி கேபிள்/டிடிஎச், லேப்டாப், கணினி, டேப்லெட், ஸ்மார்ட் போன், பட்டன் கைப்பேசி, ரேடியோ) குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அதன்பிறகு, சேகரித்த தகவல்களைக் கூகுள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x