Published : 24 Aug 2020 08:03 am

Updated : 24 Aug 2020 08:03 am

 

Published : 24 Aug 2020 08:03 AM
Last Updated : 24 Aug 2020 08:03 AM

ஆன்லைனில் இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

veterinary-applictaion
கோப்புப் படம்

சென்னை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பிவிஎஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்) உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் இன்று காலை 10 மணி முதல் செப்டம்பர் 28-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். என்ஆர்ஐ மாணவர்கள் அக்டோபர் 23-ம்தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கால்நடை மருத்துவ படிப்புVeterinary applictaionதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author