Published : 30 Jul 2020 07:10 AM
Last Updated : 30 Jul 2020 07:10 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கட்டிட வடிவமைப்பு, சிவில் இன்ஜினீயரிங் படிப்பு குறித்து வல்லுநர்கள் இன்று உரை

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டிநிகழ்ச்சியில் இன்று (ஜூலை 30)கட்டிட வடிவமைப்பு, சிவில் இன்ஜினீயரிங் படிப்புகள் பற்றிதுறைசார் வல்லுநர்கள் உரைநிகழ்த்துகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.

பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகளுக்கு விடை காணும் வகையிலான இந்த இணையவழி நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதி தொடங்கியது.

இன்றைய நிகழ்ச்சியில் மேக்கன்ஸ் ஊட்டி ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் தலைவர் என்.முரளிகுமாரன், ஆர்க்கிடெக்சுரல் ஆலோசகர் பேராசிரியர் ஏஆர்.ஜெ.சுப்ரமணியன், கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜியின் சிவில் பொறியியல் துறை தலைவர் டாக்டர் ஜி.அனுஷா, அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங்கின் சிவில் பொறியியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் எம்.கே.ஹரிதரன் ஆகியோர் பங்கேற்று கட்டிட வடிவமைப்பு, சிவில் இன்ஜினீயரிங் படிப்பு தொடர்பான பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். இந் நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இதில்பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x