

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பெற்றோர், சிறுதொழில் முனைவோர், விவசாயிகளுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், வானிலை மாற்றம், பருவமழை, உணவு உற்பத்தி,இயற்கை பேரழிவுகள் மற்றும் மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் சவால்கள் ஆகியவற்றை அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் ‘வானிலையும் வாழ்நிலையும்’ எனும் 5 நாள் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்துகிறது.
ஜூலை 31–ம் தேதி தொடங்கி, 5 நாட்கள், தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், புவியியல், இயற்பியல், கடல்சார் ஆய்வு மாணவர்கள், விவசாயிகள், பெற்றோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம். செல்போன் இருந்தால் மட்டும் போதும்.
இந்த நிகழ்வில், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ஆர்.ரமணன் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/weather.php என்ற இணையதளத்தில் ரூ.235 செலுத்தி பதிவு செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம். வானிலை மாற்றம், பருவமழை மற்றும் உணவு உற்பத்தி பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது.