

கரோனா வைரஸ் தொற்றின்தாக்கம் காரணமாக நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் என பெற்றோரிடம் கருத்துகள் கேட்டு அதன் சாராம்சத்தை இன்றைக்குள் (ஜூலை 20) சமர்ப்பிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு மத்திய அரசுக்கு இன்று அனுப்பப்பட உள்ளன. இந்த விவகாரத்தில் மாநிலங்களின்கருத்துகளை கேட்ட பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கவும், செப்டம்பரில் பள்ளிகளை திறக்கவும் மத்திய அரசு பரீசீலனை செய்து வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.