

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம், ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்ஸ், அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷன் ஆகிய ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் ‘டெட்ராஸ் டெம்மாஃப்ரீயே’ என்ற புதிய இன நெமர்டியன் புழு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் (ஓஹு தீவு) மற்றும் இந்தியாவில் சென்னை கோவளம் கடற்கரையில் பாறைகள் நிறைந்த இடத்தில் இது ஒரேநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ‘ஜூடாக்ஸா’ இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.
வெளி, உள் உருவ அமைப்பின் அடிப்படையில் இந்த புழு புதிய இனம் என்று அடையாளம் காணப்பட்டதாக சத்யபாமா ஆராய்ச்சி மாணவர்கள் விக்னேஷ்,ருச்சி கூறினர். இதற்கு உருவவியல், டிஎன்ஏ குறிப்பான்களை இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாண்டதாக பிரகாஷ் கூறினார். நெமர்டியன் புழு தொடர்பாக எதிர்கால ஆய்வுகளுக்கான அடையாள குறிப்புகளை தாங்கள் தரப்படுத்தியுள்ளதாக ராஜேஷ் கூறினார்.