புதுச்சேரி பல்கலை. நுழைவுத் தேர்வு: இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது இந்திய மாணவர் சங்கம்

புதுச்சேரி பல்கலை. நுழைவுத் தேர்வு: இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது இந்திய மாணவர் சங்கம்
Updated on
1 min read

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை 4-ம் ஆண்டாக இந்திய மாணவர் சங்கம் நடத்த உள்ளது. வரும் 20-ம் தேதி முதல் ஆன்லைனிலும், தேவைப்படுவோருக்கு நேரடியாகவும் பயிற்சியை வழங்க உள்ளனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு ஆகஸ்ட்டில் நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு எழுதுவோருக்குப் பயிற்சி தர 4-ம் ஆண்டாக இந்திய மாணவர் சங்கம் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது.

இதுதொடர்பாக மாணவர் சங்கத்தினர் கூறியதாவது:

’’இப்பயிற்சி வகுப்பில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியோர், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். வகுப்புகள் ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடக்கும் முந்தைய வாரம் வரை தினமும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு ஆன்லைனிலும், தேவைப்படுவோருக்குச் சமூக இடைவெளியுடன் நேரடியாகவும் பயிற்சி தரத் திட்டமிட்டுள்ளோம்.

தேவைப்படுவோருக்கு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், இடஒதுக்கீடு உடையோருக்கான கலந்தாய்வு தொடர்பாகவும் உதவுவோம். அத்துடன் பயிற்சி எம்மொழியில் தேவை என்பதையும் தெரிவித்தால் அம்மொழியில் பயிற்சி தருவோம்.

மேலும் தகவல் அறிய விரும்புவோர் +91 97865 00308, +91 86676 15260, +91 95664 67572, +91 75986 78039 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்’’.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முகவரி: https://bit.ly/3iKxqQG

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in