Published : 03 Jul 2020 08:04 am

Updated : 03 Jul 2020 08:04 am

 

Published : 03 Jul 2020 08:04 AM
Last Updated : 03 Jul 2020 08:04 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘ஐ கெளரி குக்கீஸ்’ இணைந்து நடத்தும் ‘நீங்களும் சாக்லேட் செய்யலாம்’ இணையவழி பயிற்சி- ஜூலை 7 முதல் 4 நாட்கள் நடைபெறுகின்றன

make-your-own-chocolate

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஐ கெளரி குக்கீஸ்’ உடன் இணைந்து பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோருக்காக நடத்தும் ‘நீங்களும் சாக்லேட் செய்யலாம்’ எனும் இணையவழி 4 நாள் பயிற்சி முகாம் இம்மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சர்வதேச சாக்லேட் தினத்தை (ஜூலை 7) முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘ஐ கெளரி குக்கீஸ்’ உடன் இணைந்து, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோருக்காக ‘நீங்களும் சாக்லேட் செய்யலாம்’ எனும் இணையவழி பயிற்சி முகாமை ஜூலை 7-ம் தேதி முதல் 4 நாட்கள் நடத்துகிறது. இம்முகாம் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணிவரை நடைபெறும்.


இதில், 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் பங்கேற்கலாம். வீட்டிலேயே சாக்லேட் செய்வது எப்படி என்பது குறித்தும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சத்து நிறைந்த சாக்லேட் செய்யும் முறை பற்றியும் ‘ஐ கெளரி குக்கீஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெளரி தாமோதரன் பயிற்சியளிக்க உள்ளார். இதில் பங்கேற்க விரும்பும்மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் பதிவுக் கட்டணமாக ரூ.249செலுத்தி https://connect.hindutamil.in/Chocolate.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


இந்து தமிழ் திசைஐ கெளரி குக்கீஸ்நீங்களும் சாக்லேட் செய்யலாம்இணையவழி பயிற்சிMake your own chocolate

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x