காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் விலக்கா?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் விலக்கா?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Updated on
1 min read

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''காய்ச்சல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆய்வு செய்துவருகிறார். அவர்களைத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்துப் பரிசீலித்து வருகிறோம்.

பொதுத் தேர்வு மையங்களில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வெழுத வரும் மாணவர்கள் பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுப்பப்படுவர். அதற்குப் பிறகு சரியாக 10 மணிக்குத் தேர்வுகள் தொடங்கி 1.15 மணிக்கு முடிவடையும்.

தேர்வுக்கு முன்னதாகவும் பின்னதாகவும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும். விரைவில் 2 முகக் கவசங்கள் அளிக்க உள்ளோம். மாணவர்களின் போக்குவரத்துக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படியே தேர்வுகள் நடத்தப்படும்’’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in