Published : 05 Jun 2020 07:11 am

Updated : 05 Jun 2020 07:11 am

 

Published : 05 Jun 2020 07:11 AM
Last Updated : 05 Jun 2020 07:11 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘இ ஸோன்’ இணைந்து வழங்கும் ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ ஆன்லைன் முகாம் ஜூன் 10-ம் தேதி தொடங்குகிறது

real-life-super-kids

சென்னை

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘இ ஸோன்’ (E ZONE) உடன் இணைந்து வழங்கும் ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ எனும் ஆன்லைன் முகாம் ஜூன் 10-ம் தேதி தொடங்குகிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ எனும் முகாம் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இம் முகாமில் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். தினமும் பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை நிகழ்வு நடைபெறும்.

குழந்தைகளின் பலம், பலவீனம் என்ன? அவர்களது தேடல் என்ன? என்பதை உரையாடல் மூலம் கண்டறிவதும், குழந்தைகளிடம் மறைந்துள்ள திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த முகாமின் உரையாடல் அமையும்.

இந்தியாவின் முதல் நாடக அடிப்படையிலான வாழ்க்கைப் பயிற்சியாளர் ஜே.எல்.ஜான் பிரதீப் பங்கேற்று உரையாட உள்ளார். தியேட்டர் அடிப்படை யிலானமுறைகளைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் பயிற்சி அளிக்கக்கூடியவர். அமெரிக்காவின் ‘பேஷன் ப்ளே இன்டர்நேஷனல்’, ‘வேர்ல்ட் க்ளோன் அசோசியேஷன்’ ஆகிய அமைப்புகளிலும்இந்தியாவின் ‘ஸ்கூலோபிரீனர்’போன்றவற்றிலும் இவர் உறுப்பினராக உள்ளார்.

பதிவுக் கட்டணம் ரூ.294

இதில் பங்கேற்கும் கட்டணமாக ரூ.294 செலுத்தி, https://connect.hindutamil.in/rlsk.php என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இ ஸோன்இந்து தமிழ் திசைரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்ஆன்லைன் முகாம்Real life super kids

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author