குமரி தீயணைப்பு நிலையங்களில் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி; கல்விக் கூடங்களில் கரோனா தடுப்பு செயல்விளக்கம் 

குமரி தீயணைப்பு நிலையங்களில் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி; கல்விக் கூடங்களில் கரோனா தடுப்பு செயல்விளக்கம் 
Updated on
1 min read

தீயணைப்புத் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலும் பள்ளிக் குழந்தைகளுக்கான கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை, நோய் தடுப்பு விழிப்புணர்வு, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மையமாக வைத்து இந்தப் போட்டிகளில் ஓவியம் வரைய வலியுறுத்தப்பட்டிருந்தது. 6 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பிரிவாகவும், 11 முதல் 16 வயதுடையை பள்ளி குழந்தைகளுக்கு மற்றொரு பிரிவாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது.

இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்களின் குழந்தைகள் மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் 192 பேர் பங்கேற்றனர். குமரி மாவட்டத் தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை மற்றும் அலுவலர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் நடந்த ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதைப்போலவே கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, கொல்லங்கோடு, குழித்துறை, குலசேகரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலும் கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடந்தன.

மேலும் குமரியில் பிளஸ் 2 தேர்வுக்கான திருத்த மையங்களில் கரோனா தடுப்பு செயல்விளக்கம் தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்றது. நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் கரோனா தற்காப்பு நடவடிக்கையைக் கடைப்பிடித்து தேர்வு மையங்களுக்கு பணியாளர்கள் வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவாமல் தடுப்பு குறித்து செயல்விளக்கமும் தீயணைப்பு துறையினர் சார்பில் அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in