பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கின

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கின
Updated on
1 min read

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (மே 27) தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. ஊரடங்கால் சில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து தேர்வுகள் முடிந்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (மே 27) தொடங்கியது. கரோனா தொற்று குறித்த அச்சத்தை அடுத்து பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு இடையே இப்பணி தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 9 வரை நடை பெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்படத் தேர்வு முடிவு வெளியிடலுக்கான பணி ஜூன் 10 முதல் 19-ம் தேதி வரை நடக்கும்.

இதற்கிடையே விடைத்தாள் திருத்துதல் பணியின்போது ஆசிரியர்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணிக்குச் சென்றுவர ஏதுவாகப் போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in