

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் மற்றும் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாற்று உபயோக பொருட்களின் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில் நேற்று நடந்தது.
விவசாயிகள் இயற்கையான முறையில் விளைவித்த அரிசி, பருப்புகள், கம்பு உள்ளிட்ட தானியங்கள், மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன் உள்ளிட்ட பொருட்களும், கழிவு பொருட் களில் இருந்து மறுசுழற்சி முறை யில் தயாரிக்கப்பட்ட பைகள், துணிப்பைகள், தரைவிரிப்புகள், பொம்மைகள் போன்றவை கண் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஐஐடி பேராசிரியர்கள், ஊழியர் கள் மற்றும் மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்ட துடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துமாறு பார்வை யாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
கண்காட்சியின் தொடக்க விழாவில், ஐஐடி பதிவாளர் ஜேன் பிரசாத், மானிடவியல் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் வி.ஆர்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.