Published : 28 Feb 2020 12:07 PM
Last Updated : 28 Feb 2020 12:07 PM

பொதுத்தேர்வுகள்: கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் தேர்வு மையங்கள்

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: கோப்புப்படம்

திருப்பூர்

பொதுத்தேர்வுகளுக்காக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 3,012 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்.28) திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி ஆரம்பித்து 21-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும்.

பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படும்.

இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணிநேரத்திலிருந்து மூன்றே கால் மணிநேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 10 மணிக்குத் தொடங்கி 1:15 மணி வரை நடைபெறும். 15 நிமிடம் கேள்வித்தாளைப் படிப்பதற்காக நேரம் ஒதுக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேரும், பத்தாம் வகுப்புத் தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், பிளஸ் 1 தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் எழுத உள்ளனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 3,012 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன".

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x