கோவை ஆர்எஸ் புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் மும்முரமாக நடைபெற்ற பொதுத்தேர்வு விடைத்தாளுடன், முகப்பு பக்கம் இணைக்கும் பணி.
கோவை ஆர்எஸ் புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் மும்முரமாக நடைபெற்ற பொதுத்தேர்வு விடைத்தாளுடன், முகப்பு பக்கம் இணைக்கும் பணி.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விடைத்தாளில் முகப்பு பக்கங்களை தைக்கும் பணி முடிவடைந்தது

Published on

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாளில் முகப்பு பக்கங்களைத் தைக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம்தேதி தொடங்கி, 24-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கி, 26-ம்தேதி வரை நடைபெற உள்ளன. கடந்தபிப். 5-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் கோவை மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோவை ஆர்எஸ்புரத்தில் உள்ள கிக்கானி மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு விடைத்தாள்களில் முகப்பு பக்கங்களை வைத்து தைக்கும் பணி திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடந்தது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்களின் சுய விவரங்கள் அங்கிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் மாணவர் அல்லது மாணவியின் புகைப்படம், பெயர், பதிவு எண், தேர்வு மையத்தின் பெயர், ‘கியூஆர்' கோடு ஆகியவை இடம் பெறும். மாணவர்களின் விவரம் அடங்கிய முகப்புத்தாள் மற்றும் விடைத்தாள்கள் தேர்வுத்துறை மூலமாக பெறப்பட்டு, தையல் இயந்திரம் மூலமாக தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் கண்காணிப் பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. விரைவாக முடிகப்பட்டது. எஸ்எஸ்எல்சி மாணவர்களின் விடைத்தாள்கள் இணைக்கும் பணி ஓரிரு நாளில் தொடங்கும்'’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in