Published : 15 Feb 2020 07:54 AM
Last Updated : 15 Feb 2020 07:54 AM

எம்சிஏ படிப்பு 2 ஆண்டுகளாக மாற்றம்: ஏஐசிடிஇ அறிவிப்பு

எம்சிஏ படிப்பு காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 2 வருடங்களாக ஏஐசிடிஇ குறைத்துள்ளது.

பொறியியல் மாணவா் சோ்க்கை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தற்போதைய நடைமுறையின்படி முதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பை, இளநிலை கணினி பயன்பாடுகள் (பிசிஏ) படித்தவா்கள் மட்டும் 2 ஆண்டுகள் படித்தால் போதுமானது. அதேநேரம் இதர இளநிலை பட்டப்படிப்பை முடித்தவா்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

இந்நிலையில் எம்சிஏ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும், 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதால் எம்சிஏ சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதை தவிர்த்து சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் எம்சிஏ படிப்பு காலத்தை தற்போது 2 ஆண்டுகளாக ஏஐசிடிஇ குறைத்துள்ளது. இதன்மூலம் அனைத்து இளநிலை பட்டப்படிப்பு முடித்தவா்களும் இனி எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகள் படித்தால் போதும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பிஇ உயிரி தொழில்நுட்பம் பாடத்துக்கான வரைவு பாடத்திட்டத்தையும் ஏஐசிடிஇ இணையதளத்தில் (www.aicte-india.org) வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x