Published : 30 Jan 2020 09:29 AM
Last Updated : 30 Jan 2020 09:29 AM

செய்திகள் சில வரிகளில்: சீனாவில் 4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் வூஹான் நகரத்தில் இருக்கும் நான்கு பாகிஸ்தான் மாணவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் தொடர்பான பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஜாஃபர் மிர்ஸா கூறுகையில், “சீனாவின் மத்திய நகரமான வூஹானில் மொத்தம் 500 பாகிஸ்தான் மாணவர்கள் உள்ளனர். இதில் 4 மாணவர்கள் கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். இதை அவர் களின் குடும்பத்துக்கு தெரிவிக்குமாறு பிரதமர் இம்ரான் கான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்” எனத் தெரிவித்தார்.

தற்போது சீனாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த 100தொழிலதிபர்கள் 28,000 மாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

பனிச்சிகரத்தில் பேஷன்ஷோ நடத்தி கின்னஸ் சாதனை படைத்த நேபாளம்

காத்மாண்டு

நேபாள் சுற்றுலா வாரியம் மற்றும் ஆர்.பி. டைமண்டு,காஸா ஸ்டைல் ஆகிய அமைப்புகள் சார்பாக ‘மவுண்ட் எவரெஸ்ட் பேஷன் ரன்வே’ எனும் பேஷன் ஷோ எவரெஸ்ட் அருகில் காலாபத்தார் எனும் இடத்தில் ஜனவரி 26-ம் தேதி நடந்தது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 5,340 மீ உயரத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x