

தேசிய கராத்தே போட்டியில் கரூர்அருகேயுள்ள பொய்யாமணி ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கம், மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் குடியரசு தினத்தன்று தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 8 பேர் கலந்துகொண்டனர்.
இதில் 8-ம் வகுப்பு மாணவர் ச.சாரதி, 7-ம் வகுப்பு மாணவர் ரெ.தனுஷ், 5-ம் வகுப்பு மாணவிகள் மா.இளஞ்சியப்ரியா, செ.லிவியா ஆகியோர் முதலிடம் பெற்று தங்க பதக்கமும், 7-ம் வகுப்பு மாணவர்கள் கோ.சவின், செ.கார்த்திக், மாணவி மு.மனோப்ரியா ஆகியோர் 2-ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கங்களும் வென்றனர்.
தேசிய கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கும். அவர்களின் பயிற்சியாளர் கண்ணனுக்கும் பள்ளியில் திங்கள்கிழமை அன்று பாராட்டுவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியைமுத்துலட்சுமி தலைமை வகித்தார். இதில் சாதனை படைத்த மாணவ,மாணவிகளையும், பயிற்சியாளரையும் ஆசிரியர்கள் பாராட்டினர்.