டாடா ஸ்டீல் செஸ் தொடர்: டுடாவுடன் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

டாடா ஸ்டீல் செஸ் தொடர்: டுடாவுடன் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

Published on

நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க் ஆன் சீ நகரில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி சுற்று போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் அனந்த், போலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் - கிறிஸ்டப் டுடாவுடன் மோதினார்.

இப்போட்டி இருவருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் இந்த தொடரில் மொத்தம் 6.5 புள்ளிகளைப் பெற்றார். இந்த சாம்பியன்ஷிப்பில் அவர் 6-வது இடத்தைப் பிடித்தார்.

இந்த தொடரில் பேபியோ கருவானா மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் அப்பட்டத்தை வென்றார். நேற்று நடந்த கடைசி சுற்று ஆட்டத்தில் அவர் ரஷ்ய வீரரான வாடிஸ்லாவ் அர்டிமீவை வென்றார். இத்தொடரில் நார்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in