

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தலையில் அதிக முடியுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அதை பார்த்த அறிவியல் ஆசிரியர் துரை, ஒழுக்கத்துடன் பள்ளிக்கு மாணவர்கள் வருவதை உறுதி செய்ய, அந்த மாணவனின் அனுமதியோடு பள்ளி வளாகத்திலேயே அவருக்கு முடித்திருத்தம் செய்தார்.
அந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப் பார்த்த சக மாணவர்கள் முறையாக முடித்திருத்தம் செய்து வருவதாக ஆசிரியர்களிடம் உறுதி அளித்துள்ளனர்.