டான்செட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

எம்.இ., எம்பிஏ உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்காக, டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி இன்று (ஜன. 7) தொடங்கியது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி இன்று (ஜன. 7) தொடங்கியது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 31-ம் தேதி வரை https://www.annauniv.edu இணையதளத்தில் நடைபெறும்.

தேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.300 செலுத்தினால் போதும். கல்லூரிகளில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதி, எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in