முதுகெலும்பு பாதிப்பை கட்டுப்படுத்தும் ‘ரோபோ பெல்ட்’

முதுகெலும்பு பாதிப்பை கட்டுப்படுத்தும் ‘ரோபோ பெல்ட்’
Updated on
1 min read

முதுகெலும்பு பாதிப்பு உள்ள நபர்கள் வசதியாக அமரும் வகையில் அதி நவீன ரோபோ பெல்ட் உதவும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் மற்றும் எலும்பு நோய் காரணமாக முதுகெலும்பு பாதிப்பு ஏற்படுகிறது. மனிதர்களுக்கு முதுகெலும்பு பாதிப்பு ஏற்பட்டால், அன்றாட பணிகளை செய்வதே மிகப்பெரிய சவாலாகிவிடும். அதேபோல், நடப்பதற்கும், அமர்வதற்கும் சிரமம் ஏற்படும்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், முதுகெலும்பு பாதிப்பால் அவதிப்படும் நபர்கள் வசதியாக அமரும் வகையில் ரோபோ பெல்ட் உருவாக்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவானது முதுகெலும்பு பாதிப்பு பற்றிய அறிவியல் இதழில், ‘ட்ரூஸ்ட்’ என்ற தலைப்பில் தற்போது வெளியிடப்பட் டுள்ளது.

இந்த ஆய்வில் பங்குகொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் அகர்வால் கூறுகையில், “முதுகெலும்பு பாதிப்பால் அவதிப் படும் நபர்கள் அமரும்போது, நாங்கள் கண்டுபிடித்துள்ள பெல்ட்டை இடுப்பில் அணியவேண்டும். உடல் அசைவுக்கு ஏற்றவாறு, பெல்ட்டில் உள்ள இயந்திரம் மூலம் உந்து சக்தி ஏற்பட்டு உடற்பகுதிக்கு வழங்குகிறது. இதனால், முதுகெலும்பில் வலி ஏதும் ஏற்படாமல் அமரமுடியும். ட்ரூஸ்ட் பெல்ட்டானது முதுகெலும்பை சீரற்ற முறையில் வலைய விடாமல் கட்டுப்படுத்தி, சீரான அசைவுகளுக்கு உதவுகிறது.

100 சதவீதம் வேலை செய்கிறது

ரோபோ பெல்ட்டை அணியும் நபர்கள், வழக்கம்போல உடல் அசைவுக்கு பயிற்சி செய்யவேண்டும். இந்த ஆய்வின் முடிவுகள் 100 சதவீதம் வேலை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக ரோபோ பெல்ட்டை முழுகருவியாக விரைவில் மேம்படுத்த வுள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in