Published : 07 Jan 2020 07:41 AM
Last Updated : 07 Jan 2020 07:41 AM

இன்று என்ன? - அந்த நான்கு நட்சத்திரங்கள்

உலகில் தொலைநோக்கியை கண்டுபிடித்தவர், நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கலீலியோ கலிலி. இவர் 1564 பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலி நாட்டின் பைஸா நகரில் பிறந்தார்.

அறிவியல் துறையில் இவரது கண்டுபிடிப்புகள் உலக மக்களாலும் விஞ்ஞானிகளாலும் பெரியளவில் போற்றப்பட்டது. தனது தொலைநோக்கி மூலம் ஆய்வில் ஈடுபட்ட கலீலியோ 1610 ஜனவரி 7-ம் தேதி வியாழன் கோளுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார்.

இவை நிலையான நட்சத்திரங்கள் அல்ல வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்று எண்ணினார். அதேபோல் ஜனவரி 13-ல் வியாழனின் நான்காவது நிலாவையும் கண்டறிந்தார்.

இந்த நிலாக்கள் ஐஓ, ஐரோப்பா, கேனிமெட், கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x