

உலகின் மிகப்பெரிய பூ என்று அறியப்படும் ரஃப்லேசியா துவான்-முடேவின் மற்றொரு பெரிய பூ தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய மேற்கு சுமத்ரா காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய ரஃப்லேசியா பூ கண்டுபிடிக்கப் பட்டது. அந்த பூவானது சிவப்பு நிறத்தில் வெண் கொப்புளங்கலோடு பெரிய இதழ்களை கொண்டிருந்தன. அது 107 செ.மீ. அளவு இருந்தது. இதுவே உலகின் மிகப்பெரிய பூ என பதிவாகி யிருந்தது.
இந்நிலையில், அதைவிட பெரிய ரஃப்லேசியா பூ தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய காட்டுயிர் பாதுகாவலர்கள் தெரிவித் துள்ளனர். இந்த ரஃப்லேசியா பூவின் விட்டமானது 111 செ.மீ. (3.6 அடி) அளவு உள்ளது.
-ஏஎப்பி