

அனைத்து திடநிலை லித்தியம் பேட்டரிகளை உருவாக்க அமெரிக்காவின் கார்னிங் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகங்கள் இரண்டும் ஒன்றிணைந்துள்ளன.
திடநிலை லித்தியம் பேட்டரி குறித்த கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக புதுவைப் பல்கலைக்கழகம் சமீபத்தில் அமெரிக்காவின் கார்னிங் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓர் ஆலோசனை திட்டத்தைப் பெற்றுள்ளது.
வாழ்க்கையை மாற்றும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதில், 165 ஆண்டுகளுக்கும் மேலாக கார்னிங் முன்னணியில் உள்ளது. இந்தத் திட்டத்தில், பாரம்பரிய திரவ எலக்ட்ரோலைட் அடிப்படையிலான லித்தியம் - அயர்ன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றல் அடர்த்தி, இயக்கக்கூடிய வெப்பநிலை வரம்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதில் அதிக நன்மைகளைக் கொண்ட அனைத்து திடநிலை லித்தியம் பேட்டரியை உருவாக்க கார்னிங் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்துள்ளன.
புதுவைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையின் உயர் ஆற்றல் அடர்த்தி பேட்டரி ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமசாமி முருகன் இப்பணியில் ஈடுபட உள்ளார்.