Last Updated : 18 Dec, 2019 05:04 PM

 

Published : 18 Dec 2019 05:04 PM
Last Updated : 18 Dec 2019 05:04 PM

ஜிப்மரில் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 24-ம் தேதி முதல் கலந்தாய்வு 

புதுச்சேரி

ஜிப்மரில் முதுநிலை மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில், ஜனவரி 1-ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவம் (எம்.டி., எம்.எஸ். மற்றும் டி.எம்./எம்.சி.எச்.) படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி 14 நகரங்களில் அமைந்துள்ள 58 தேர்வு மையங்களில் நடந்தது.

முதுநிலை மருத்துவத்தின் (எம்டி, எம்எஸ்) 100 இடங்களுக்கு 14,659 பேரும், டிஎம்/எம்சிஎச் 50 இடங்களுக்காக 2,673 பேரும் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் நேற்று (டிசம்பர் 17-ம் தேதி) ஜிப்மர் இணையதளத்தில் வெளியாகின. இத்தேர்வுப் பட்டியல் ஜிப்மர் கல்வி மையத்தில் இன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜிப்மர் நிர்வாகத்தில் கூறும்போது, ’’டி.எம்./ எம்.சி.எச். இடங்களுக்கான முதல் கலந்தாய்வு, டிசம்பர் 24-ம் தேதியன்று நடைபெறுகிறது. எம்.டி., எம்.எஸ். இடங்களுக்கான முதல் கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜிப்மரில் உள்ள கலையரங்கில் இந்தக் கலந்தாய்வு நடக்கும்.

அதைத் தொடர்ந்து எம்.டி., எம்.எஸ். மற்றும் டி.எம்., எம்.சி.எச். தேர்ச்சி பெற்றோரின் விவரம் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும். வகுப்புகள் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x