2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை இந்த வாரம் வெளியீடு

2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை இந்த வாரம் வெளியீடு
Updated on
1 min read

அடுத்த ஆண்டு தமிழக அரசு துறைகளில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப் பதற்கு உதவியாக இருக்கிறது.

இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காலி இடங்களின் எண்ணிக்கை

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:

2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் காலம், தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும் அடுத்த ஆண்டு ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாலும்அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in