Last Updated : 16 Dec, 2019 01:14 PM

 

Published : 16 Dec 2019 01:14 PM
Last Updated : 16 Dec 2019 01:14 PM

டிஸ்லெக்சியா இருந்தாலும் போட்டித் தேர்வில் வெல்ல முடியும்: கூடுதல் ஆணையர் நந்தகுமார் பேச்சு

டிஸ்லெக்சியா இருந்தாலும் போட்டித் தேர்வில் வெல்ல முடியும் என்று மத்திய நிதி அமைச்சக வருமான வரிக் கூடுதல் ஆணையர் நந்தகுமார் குறிப்பிட்டார்.

புதுச்சேரி இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சர்வதேச குழந்தைகள் உரிமை தினத்தை கொண்டாடும் வகையில் குழந்தை தலைவர் விருதுகள் 2019 வழங்கப்பட்டன.

குழந்தை நேயப் பணிகளைச் செய்யும் குழந்தைகள், அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர், பள்ளி, குடும்பம் மற்றும் கிராமங்களை தேர்வு செய்து அங்கீகாரம் செய்து கவுரவிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தேர்வானோருக்கு பத்து தலைப்புகளில் விருதுகள் தரப்பட்டன.

குழந்தைத் தலைவர் விருதுகள் வென்றோர்
அன்னை தெரசா விருது- சந்தியா,
ஜீரோ பில்லிமோரியா விருது- பாலாஜி,
எரிக் எரிக்சன் விருது- அஸ்வதா,
மலாலா யூசப்சாய் விருது- அல்தாப்,
அப்துல் கலாம் சுற்றுச்சூழல் நட்பு விருது- ஜெய் அஸ்வனி ,
நெல்சன் மண்டேலா தகவல் தொடர்பாளர் விருது- சிவசக்தி

குழந்தை நேய விருதுகள் வென்றோர்
குழந்தை நேய ஆசிரியர் விருது- அருள்மொழி,
குழந்யை நேய பள்ளி விருது- நன்நாடு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி,
குழந்தை நேய குடும்ப விருது- லோகநாயகி,
குழந்தை நேய கிராம விருது- விழுப்புரம், பணம்பட்டு கிராமம்.

விழாவில் மத்திய நிதி அமைச்சக வருமான வரிக் கூடுதல் ஆணையர் நந்தகுமார் பேசுகையில், "குழந்தைகளுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அதையும் மீறி தனித்துவத்தை வெளிப்படுத்துவோரே தலைமைப் பண்புடையவராக மேடையேறுகிறார்கள். சிறு வயதில் நான் மேடையேறியது இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியமும், கல்வியும் முக்கியம். ஆனால் பலருக்கும் அது சரியாகக் கிடைப்பதில்லை.

குழந்தைப் பருவத்தில் ஆரோக்கிய உணவுப் பழக்கம் இல்லாததால் இளைஞராகும் போது உடல் நலக் குறைபாடு அடையும் சூழல் உள்ளது. உடல் மற்றும் மன ரீதியான குறைபாடுக்கு கல்வி, உணவுப் பழக்கம் சரியாக இல்லாததும் ஓர் காரணம். சரியானதையும், தவறானதையும் கல்வி கற்றுத் தரவில்லை.

தங்களிடமுள்ள அறிவை முழுமையாகப் பயன்படுத்தினாலே குழந்தைகளும், இளைஞர்களும் தலைமைப் பண்புடையவராகலாம். டிஸ்லெக்சியா குறைபாடு இருந்தாலும் போட்டித் தேர்வில் வெல்லலாம். இதுபற்றி எனது கருத்துகள் அமெரிக்காவில் கேட்கப்பட்டு அக்குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.

விழாவில் புதுச்சேரி ஆட்சியர் அருண் உட்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x