எந்த நேர்முகத் தேர்விலும் பென்சிலால் மதிப்பெண் குறிக்கப்படாது: வைகோ குற்றச்சாட்டுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்

எந்த நேர்முகத் தேர்விலும் பென்சிலால் மதிப்பெண் குறிக்கப்படாது: வைகோ குற்றச்சாட்டுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Updated on
1 min read

குருப்-1 பணிகளுக்கு விரை வில் நடத்தப்பட உள்ள நேர்முகத் தேர்வுக்கு மதிப்பெண் பென்சிலால் குறிக்கப்படும் என்றும், இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ள தாகவும் மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ, டிஎன்பிஎஸ்சி மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கும் குரூப்-1 பணிக்கான நேர்முகத் தேர்வில் வெளிப்படையாக மோசடி நடைபெற இருப்பதாக ஓர் அரசியல் தலைவர் அறிக்கை வெளியிட்டிருப் பதாக புதன்கிழமை செய்தி வெளி வந்திருக்கிறது.

தேர்வாணையத்தின் மாண் புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பாக இதுகுறித்து வெளிவந்திருக்கும் செய்திகளை தேர்வாணையம் திட்டவட்டமாக மறுக்கிறது.

எந்த நேர்முகத் தேர்விலும் மதிப்பெண்களை பென்சிலால் குறிக்கும் வழக்கம் தேர்வாணைய நடைமுறையில் எப்போதும் இல்லை. நேர்முகத் தேர்வில் தேர் வருக்கு வழங்கப்படும் மதிப்பெண், வல்லுநர் குழுவினால் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடி வமைக்கப்பட்ட குறியீட்டுத் தாளில் பேனா மையினால் (Ink Pen) மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எனவே இதுகுறித்து, தேர்வர் கள் யாரும் அச்சப்படத் தேவை யில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in