Published : 10 Dec 2019 08:20 AM
Last Updated : 10 Dec 2019 08:20 AM
மாநிலங்களவையில் சாந்தாலி மொழியை ஒடிசாவை சேர்ந்த பெண் எம்.பி ஒருவர் முதல்முறையாக பேசினார்.
மாநிலங்களவையில் உள்ள எம்.பி.க்கள் தங்களின் தாய்மொழியில் பேசுவதை, அவை தலைவர் வெங்கய்ய நாயுடு ஊக்குவித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநில எம்.பி.க்கள் பேசும் மொழியை, அவை அலுவலர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிற எம்.பி.க்களுக்கு ஹெட்போன் மூலம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி சரோஜினி ஹெம்ப்ராம், பழங்குடியின மொழியான சாந்தாலி மொழியை மாநிலங்களவையில் முதல் முறையாக பேசியுள்ளார். மாநிலங்களவையில் அவர் பேசுகையில்,“சாந்தாலி மொழிக்காக ‘ஓல் சிக்கி’ என்னும் எழுத்து நடையை உருவாக்கியவர் ரகுநாத் முர்மு. இவர் பழங்குடியின மக்களால் போற்றப்படும் மிகப்பெரிய தலைவர். மும்முவின் பல்வேறு தொண்டுக்காக, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும்” என்று வலியுறுத்தினார். மாநிலங்களவையில் முதல்முறையாக சாந்தாலி மொழியை பேசிய பெண் எம்.பி.க்கு பிற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT