Published : 02 Dec 2019 01:24 PM
Last Updated : 02 Dec 2019 01:24 PM

நீட் 2020 தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது.

யார் எழுதலாம்?
12-ம் வகுப்பை முடித்தவர்களும் 2020-ல் 12-வது வகுப்புத் தேர்வை எழுத உள்ளவர்களும் நீட் தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு
17 வயது முதல் 25 வயது வரையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி/ஓபிஎசி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் விதிவிலக்கு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?
இன்று (டிச. 2) தொடங்கும் விண்ணப்பத் தேதி, ஜனவரி 1-ம் தேதி 2020 உடன் நிறைவு பெறுகிறது. ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

என்ன கட்டணம்?
பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி மாணவர்களும் ரூ.1,400-ஐச் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800.

மார்ச் 27, 2020-ல் நீட் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x