

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா, கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடினார். அதன்பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் ஹோபர்ட் நகரில் நடக்கவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் போட்டிகளில் ஆடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் அழைப்பு
கராச்சி
பாகிஸ்தானில் சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதை பல்வேறு நாடுகளும் தவிர்த்து வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானில் 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆட வருமாறு தென் ஆப்பிரிக்க அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பிறகு இந்த கிரிக்கெட் தொடரை வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.