

மக்களவையில் அமைச்சர் ஷெகாவத் கூறியதாவது:
கழிவறைப் பயன்படுத்தும் 16.34 கோடி கிராமப்புற குடும்பங்களில் 2.84 கோடி உத்தரபிரதேசத் திலும், 1.59 கோடி பிஹார்
மற்றும் 1.37 கோடி மேற்கு வங்கத்திலும் உள்ளனர்.
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாமல் அனைவருக்கும் கழிப்பிடவசதி ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரையும் தவற விடுவதில்லை.
கழிப்பறை இல்லாதவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித் தர உத்தரபிரதேசம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம்.
இதில் ஏதாவது கிராமப்புறக் குடும்பங்கள் தவறவிட்டிருந்தால் அவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஷெகாவத் கூறினார்.
- பிடிஐ