Published : 25 Nov 2019 08:03 AM
Last Updated : 25 Nov 2019 08:03 AM

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிற்றுப்போக்கு நோய்க்கு புதிய தடுப்பூசி: ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

லண்டன்

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு (டயெரியா) நோயை குணப்படுத்தும் தடுப்பூசிக்கான சோதனை வெற்றிப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் வயிற்றுப்போக்குகாரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. வயிற்றுப்போக்கு நோயானது ஈ-கோலை என்ற நச்சுதன்மைக் கொண்ட பாக்டீரியாவில் உருவாகிறது. உலக சுகாதார அமைப்பு(WHO), இவ்வகை நோய்க்கு தடுப்பூசிகளை விரைவில் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், இந்த வகை பாக்டீரியாவை எதிர்க்க தேவையான எதிர்ப்புசக்தியை கொண்ட ஈடிவிஏஎக்ஸ் தடுப்பூசியை, ஸ்வீடனில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழ கத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருந்தனர்.

இந்த தடுப்பூசியை வங்கதேசத்தில் ஆறுமாதம் முதல் 5 வயது வரை உள்ளவயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 450 குழந்தைகளுக்கு சோதனைசெய்யப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் நோய்க்கான ஈ-கோலை பாக்டீரியாவை செயலிழக்க செய்து, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ததாக, பிரபல ‘லான்செட்தொற்று நோய்கள்’ இதழில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசி மூலம் 2 முதல் 5 வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு 80-100சதவீதமும், 6 -11 மாதம் குழந்தைகளுக்கு 50-80 சதவீதமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

அதேபோல், குழந்தைகளின் சுருங்கிய குடலின் அகலம் மற்றும் இயக்கம் தடுப்பூசியால் மேம்பட்டதாகவும், இந்த வகை நோய்கள் பொருளாராதத்தில் மிகவும் பின்தங்கியநாட்டில், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x