

புதுடெல்லி:
அந்தமான் தீவில் உள்ளகமார்டோ என்ற குட்டித்தீவில் உள்ள குக்கிராமத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்தமான் கடல் பகுதியில் ரோந்து சென்ற இந்திய போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கடற்படையைச் சேர்ந்த கர்தீப் கப்பலில் இருந்து அதிவிரைவு படகு ஒன்று கிளம்பி சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருக்கும்போது, படகிலேயே குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் சேயையும் கமோர்டோ ஜெட்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.