Published : 22 Nov 2019 08:20 AM
Last Updated : 22 Nov 2019 08:20 AM

கொரிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சமீர் தோல்வி

குவான்ஜியு:

கொரிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி, கொரியாவில் உள்ள குவான்ஜியு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் நாட்டு வீரரான கன்டா சுனேயாமாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், 14-ம்நிலை வீரரான சுனேயாமாவிடம் 14-21 19-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தர். இப்போட்டியில் தோற்றதால் ஸ்ரீகாந்தின் தரவரிசை 11-வது இடத்துக்கு இறங்கியது.

மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா, உள்ளூர் வீரரான கிம்டாங்ஹுனிடம் 19-21 12-21 என்ற நேர் செட்களில் தோல்விடைத் தழுவினார். இப்போட்டி 40 நிமிடங்கள் நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x