Published : 22 Nov 2019 08:15 AM
Last Updated : 22 Nov 2019 08:15 AM

சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், நாஜி தலைவர்களின் பொருட்கள் ஏலம்

பிராங்பேர்ட் ஆம் மெயின்

இரண்டாம் உலகப்போரின் மிக கொடூரமான நாஜி படையின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பல லட்சம் யூத மக்களை கொன்று குவித்தார். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரியான ஹிட்லர் கொல்லப்பட்டப் பின்னர், அவர் பயன்படுத்தி வந்த பொருட்களை அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹிட்லரின் தொப்பி, அவரது நண்பர் ஈவா பிரவுனுக்கு சொந்தமான ஆடை பொருட்கள் மற்றும் நாஜி படையின் பொருட்கள் ஆகியவற்றை பிரபல ஏல நிறுவனமான ஹெர்மன் ஹிஸ்டோரிகா தனது இணையதளத்தில் புதன்கிழமை ஏலம் விட தயாரானது.

ஏலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஹிட்லரின் தொப்பியானது 39 லட்சத்துக்கு ஏலம் போனது.

அதேபோல், ஈவாவின் துணிகளை ஆயிரக் கணக்காணோர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

ஹிட்லரின் நாஜி கட்சியின் ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி ஒரு கோடிக்கு ஏலம்போனது. நாஜி தலைவர்களின் ஆடைகள் மற்றும் தனிப்பட்ட உடமைகளும் நல்ல விலைக்கு ஏலம் போனது.

இந்த ஏலத்துக்கு ஐரோப்பிய யூத சங்கத்தின் தலைவர் ரப்பி மெனாச்செம் மார்கோலின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x