Published : 22 Nov 2019 08:07 AM
Last Updated : 22 Nov 2019 08:07 AM

ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பேரை பாதிக்கும் மூளை காயம் நோய்: இந்தியா - பிரிட்டன் நிபுணர்களால் மிகப்பெரிய ஆய்வு தொடக்கம்

லண்டன்

இந்தியாவில் மூளை காயம் நோய் உள்ள குழந்தைகள் குறித்து இந்தியா-பிரிட்டன் நிபுணர்கள் மிகப்பெரிய ஆய்வைத் தொடங்கவுள்ளனர்.

மூளைச் சேதம் அல்லது மூளை காயம் (Brain Injury) என்பது மூளைகளில் உள்ள செல்கள் அழியும் போது அல்லது சிதைவடையும்போது ஏற்படுகிறது.

எதிர்பாராத அதிர்ச்சியால் மூளைக்கு செல்லும் நரம்பு சேதம் ஆகும்போது மூளை அதை தாங்க முடியாமல், செயல் இழக்கும். அதேபோல், தலையில் ஏற்படும் காயம், தாக்கம் காரணமாகவும் ஏற்படும்.

பிரசவத்தின் போது ஏற்படும் மூச்சுதிணறலால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுவதால் மூளை காயம் நோய் குழந்தைகளுக்கு அதிகம் வருகிறது.

மூளை காயம் ஏற்படும்போது மூளைசாவு அல்லது மூளை செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். இதன்காரணமாக, கை,கால் வலிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

உலகளவில் இந்த நோயால் 5-7கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 12 லட்சம்மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், அவற்றில் 87,000 (17.4 சதவீதம்) பிறப்பு தொடர்பான மூளைக் காயத்துடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு மூளை காயம் நோய் ஏற்பட்டு கால் மற்றும் கை வலிப்பைத் தடுக்க உதவும் வகையில் உலகின் மிகப்பெரிய ஆய்வை பிரிட்டன் மற்றும் இந்திய முன்னணி நிபுணர்கள் தொடங்கவுள்ளனர்.

நோய் குறித்து நியோனாடல் என்செபலோபதி (PREVENT) மிகப்பெரிய ஆய்வு நடத்துவதன் மூலம் கால்-கை வலிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று லண்டனில் உள்ள தி இம்பீரியல் கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து லண்டன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுதின் தயில்கூறுகையில், “உலகம் முழுவதும்உள்ள குழந்தைகளின் இறப்பு மற்றும் இயலாமை போவதற்கு ‘பராமரிப்பு மூட்டை(care bundle)' சிகிச்சைமூலம் கணிசமாகக் குறைக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் 4 ஆண்டுகள் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்த,தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், 3.4 மில்லியன் பவுண்டுகள் நிதியளித்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக பெங்களூரூமருத்துவக் கல்லூரி, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று பெரிய மருத்துவமனைகளில் இருந்து சுமார் 80,000 பெண்களிடம் இருந்து தரவுகள் பெறப்படவுள்ளன.

உலகம் முழுவதும் மூளைக் காயம் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் எலக்ட்ரோ என்செபலோகிராம் (ஈஇஜி)மேம்பட்ட காந்த அதிர்வு இமேஜிங்(எம்.ஆர்.ஐ) உள்ளிட்ட விரிவான நரம்பியல் சோதனை செய்யப்படவுள்ளது.

லண்டன் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஹெலன் கிராஸ் கூறுகையில்,“உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வலிப்பு நோயால் அவதிப்படுகிறார்கள். இந்த நோய்களின் பாதிப்பு, இந்தியா போன்ற நாடுகளில் இரு மடங்கு அதிகமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x