

அழியும் நிலையில் இருக்கும் ‘ஆலிவ் ரிட்லீ’ எனும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மீன்பிடிக்க ஒடிசா மாநில அரசு தடை விதித்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள 8,000 மீனவக் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஒடிசா அரசு முடிவு செய்யுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் ஆலிவ் ரிட்லீ அமைகள் ஒடிசா கடற்கரையில் முட்டையிடும். ஆகவே எதிர்வரும் 2020 -ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை கடலில் மீன்பிடிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் தடை காலம் முடியும் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“நடப்பு பருவகாலத்தில் ஆமைகளை பாதுகாக்க மாநில நிர்வாகம் தயாராக உள்ளது” என்று தலைமை செயலாளர் ஏ.கே.திருப்பதி தெரிவித்தார்.
- பிடிஐ