Last Updated : 16 Nov, 2019 10:38 AM

 

Published : 16 Nov 2019 10:38 AM
Last Updated : 16 Nov 2019 10:38 AM

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன இயக்குநர்களைச் சந்திக்கும் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி

ஐஐடி, என்ஐடி, ஐஐஇஎஸ்டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் இயக்குநர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் கருத்தரங்கை நிகழ்த்த உள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இந்தியத் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) மற்றும் இந்திய பொறியியல், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.இ.எஸ்.டி.) ஆகிய கல்வி நிறுவனங்களின் இயக்குநர்களுடன் நவம்பர் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் கருத்தரங்கை நிகழ்த்துகிறார்.

இந்தியா முழுவதும் உள்ள 152 மத்தியப் பல்கலைக்கழகங்களில் குடியரசுத் தலைவர் கவுரவ அழைப்பாளராக உள்ளார். இந்நிலையில் 23 ஐஐடிக்கள், 31 என்ஐடிக்கள் மற்றும் ஷிப்பூர் ஐஐஇஎஸ்டி ஆகியவற்றின் இயக்குநர்களுடன் உயர் கல்வி தொடர்பான கருத்தரங்கை அவர் நிகழ்த்துகிறார்.

இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் மற்றும் ஏஐசிடிஇ தலைவர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தக் கருத்தரங்குகளில் கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவது, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அத்துடன் தேசத்தைக் கட்டமைப்பதில் மாணவர்களின் பங்கு, ஆராய்ச்சியை ஊக்குவிப்பது, புதிய கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் திறன், ஆசிரியர் காலியிடங்களைப் பூர்த்தி செய்வது ஆகியவை குறித்தும் பேசப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x