

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடும் இந்திய அணியில் லியாண்டர் பயஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நவம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஆட 8 வீரர்களைக் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணிக்காக ஆடாத நிலையில், அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். லியாண்டர் பயஸுடன் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சசி குமார் முகுந்த், ரோஹன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், சாகேத் மைனேனி மற்றும் சித்தர்த் ராவல் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
- பிடிஐ