அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்டிக் கொடுத்த கிராம மக்கள்

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்டிக் கொடுத்த கிராம மக்கள்

Published on

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழையூர்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 1954முதல் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இது தற்போது நடுநிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஓட்டுக்கூரை கட்டிடங்கள் சேதமடைந்ததால் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வந்தனர். வகுப்பறைக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை அறிந்த இக்கிராம இளைஞர்கள், வெளிநாட்டில் வேலைபார்க்கும் இளைஞர்கள், கிராமத்தினர் ஆகியோர் சேர்ந்து ரூ. 7 லட்சம் திரட்டினர். அந்தப் பணத்தில் பள்ளி வளாகத்திலேயே இரண்டு வகுப்பறைகளை அடங்கிய புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்தனர். புதிய வகுப்பறைகள் கட்டித்தந்ததற்காக கிராம மக்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in