

கோவை யுனைடெட் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
கோவையை அடுத்த பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளி சார்பில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளிமாணவர்களுக்கான இறகுப்பந்துபோட்டி, பள்ளியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 12, 14, 16, 18 ஆகிய வயது பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் 70 மாணவர்களும், 32 மாணவிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: 12 வயது பிரிவு முதலாவது காலிறுதியில் அருண் ஆதித்யா, அஸ்வந்த் குமாரை 21-10, 21-19 என்ற செட்கணக்கிலும், இரண்டாவது காலிறுதியில் ரகோத்தமன் கிரண், நிகிலை21-5, 21-13 என்ற செட் கணக்கிலும், மூன்றாவது காலிறுதியில் ஹரிபிரியன், ஸ்ரீஹரியை 21-16, 21-8 என்ற செட் கணக்கிலும், நான்காவது காலிறுதியில் ரேஷ்மன் முகேஷ், சஞ்சயை
21-17, 21-19 என்ற செட் கணக்கிலும் வென்றனர்.
14 வயது பிரிவு முதலாவது காலிறுதியில் சஞ்சய், ரசூலை 21-17, 21-16 என்ற செட் கணக்கிலும், இரண்டாவது காலிறுதியில் சச்சின், கருணை இசையை 21-2, 21-8 என்ற செட் கணக்கிலும், மூன்றாவது காலிறுதியில் மிதேஷ், ஓபிளிக்கை 21-8, 21-7 என்ற செட் கணக்கிலும், நான்காவது காலிறுதியில் சஞ்சய் பாரதி, பிரபாகரனை 21-10, 21-13 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தினர்.
12 வயது மாணவியருக்கான முதலாவது அரையிறுதியில் சாதனா, ஜோஷிகாவை 21-4, 21-9 என்ற செட் கணக்கிலும், இரண்டாவது அரையிறுதியில்விபூர்வா, சௌந்தர்யாவை 21-7, 21-5 என்ற செட் கணக்கிலும் தோற்கடித்தார்.
நாளை பரிசளிப்பு விழா 14 வயது முதலாவது அரையிறுதியில் சாதனா, திவ்யதர்ஷினியை 21-12, 21-14 என்ற செட்கணக்கிலும், இரண்டாவது அரையிறுதியில் விபூர்வா,தீஷாவை 21-11, 21-12 என்ற செட் கணக்கிலும் வென்றார். மற்ற பிரிவு போட்டிகள் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களும் பரிசளிப்பு விழாவும் நாளை (நவ. 14) நடைபெறுகின்றன.யுனைடெட் கல்வி குழுமங்களின் தலைவர் சண்முகம் பரிசு வழங்குகிறார்.