

லண்டன்
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் செரேவை எதிர்த்து ஆடொனார். இப்போட்டியின் நடப்பு சாம்பியனான செரேவ், இந்த ஆட்டத்தில் ரபேல் நடாலை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 6-ம் நிலை வீரரான ஸ்டெபானஸ் சிசிபாஸ், 7-6, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் டானில் மெட்வடேவை வென்றார். -பிடிஐ