Published : 12 Nov 2019 08:10 AM
Last Updated : 12 Nov 2019 08:10 AM

காபி குடித்தால் கல்லீரல் புற்றுநோய் வருவதை குறைக்கலாமா?- அயர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்

லண்டன்

கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை காபி குடிப்பதன் மூலம் குறைக்கலாம் என்று அயர்லாந்து ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளவில் காபி அதிகமாக மக்கள் விரும்பி குடிக்கிறார்கள். இதுகுறித்து அயர்லாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, பல ஆராய்ச்சி முடிவுகளில் காபி குடிப்பதால் ஏற்படும் நல்லது குறித்து விளக்கப்பட்டதால், காபி குடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கலாமா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகளை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் கேன்சரில் வெளியிடப்பபட்டுள்ளது. அதில்,இங்கிலாந்து நாட்டின் சுமார் 7.5ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 471,779 பேரின் காபி குடிக்கும் பழக்கத்தை ஆய் வுக்கு உட்படுத்தப்பட்டது.

காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது காபி குடிப்பவர்களில்கல்லீரல் புற்றுநோயின் பொது வடிவமான ஹெபடோ செல்லுலர் கார்சினோமா(எச்.சி.சி) இல்லை.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் காபி குடிப்பதாக தெரிவித்தனர். காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​காபி குடிப்பவர்கள் வயதான வர்கள், ஆண்களாக இருந்தனர்.

அவர்களில் பலர் முன்பு அல்லது தற்போது புகைப்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் அதிக மதுபழக்கம் கொண்டவர்களாகவும், அதிக பருமனாகவும் இருந்தனர். ஆனால், காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது நீரிழிவு நோய், சிரோசிஸ், பித்தப்பைக் கற்கள் மற்றும் பெப்டிக் புண்கள் போன்ற நாட்பட்ட நோய் பாதிப்புகள் குறைவாக இருந்தன. இதனை அடிப்படையாககொண்டு, காபி குடிப்பவர்களுடன்ஒப்பிடும்போது காபி குடிப்பவர்கள் எச்.சி.சி உருவாகும் வாய்ப்பு 50 சதவீதம்குறைவாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் மெக்மெனமின் கூறுகையில், “இந்த நிகழ்வுக்கு பின்னால் இருக்கும் உயிரியல் காரணங்களைத் தீர்மானிக்க எங்களுக்கு இன்னும் பல ஆராய்ச்சி தேவை” என்றார்.

குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்டில் ஆராய்ச்சியாளர் கிம்துடிரான் கூறுகையில்,“காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மது, புகையிலை பழக்கம் இல்லாமல் இருந்தால் மட்டுமே கல்லீரல் நோயை தடுக்கலாம். எல்லா கெட்ட பழக்கத்தையும் வைத்துக் கொண்டு காபி குடித்தால் புற்றுநோயை தடுக்க முடியாது” என்றார். கல்லீரல் புற்றுநோய்க்கான கண்டுபிடிப்புகள் உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் அறிக்கையின் ஆதாரங்களுடன் ஒத்துப்போகும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x