Published : 12 Nov 2019 08:07 AM
Last Updated : 12 Nov 2019 08:07 AM

வனவிலங்கு கடத்தலை தடுக்க ‘சூஹேக்கதான்’ நிகழ்ச்சி

கொல்கத்தா

உலகளவில் இருக்கும் விலங்குகளில் 7-8% இன விலங்குகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புலிகள், சிறுத்தைகள், பனி சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளும், பாம்பு போன்ற ஊர்வன விலங்குகள் மற்றும் பறவைகள் இனம் என இந்தியாவில் 91,000 வகையான விலங்குகள் உள்ளன. இவற்றில், 12.6% பாலூட்டிகள், 4.5% பறவைகள், 45.8% ஊர்வன மற்றும் 55.8% நீர் வாழ் உயிரினங்கள் உள்ளன.

இதற்கிடையில் வனவிலங்குகளின் உறுப்புகளுக்காக ஏராளமான விலங்குகள் வேட்டையாடவும், கடத்தவும் படுகிறது. இதனை, தொழில்நுட்ப மூலம் எவ்வாறு தடுக்க முடியும் என்று அசோசியேஷன் ஆஃப் சூஸ் அண்ட் அக்குவாரிம்ஸ், அமெரிக்க அரசு இணைந்து ‘சூஹேக்கதான்’ என்ற நிகழ்ச்சியை சர்வதேச அளவில் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் (WII) இணைந்து இந்தியாவில் முதல்முறையாக கொல்கத்தாவில் 9,10 ஆகிய தேதிகளில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த சூஹேக்கதான் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றாக இணைத்து ஒரு குழுவாக இணைக்கப்படுவார்கள்.

டெல்லியில்...

ஒரு குழுவில் குறைந்தது 2 முதல்6 பேர் வரை இருப்பார்கள். வனவிலங்குகள் கடத்தல் கும்பல்களை எவ்வாறு கண்டுபிடிக்கலாம். தொழில்நுட்பங்களை வைத்து அவர்களை எவ்வாறு பின்தொடர்வது போன்ற அடிப்படையில் குழு கண்டுபிடித்த தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனகள் நிகழ்ச்சியில் பகிரப்பட்டது. அதேபோல், பிற நாட்டு குழுவின் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 14 நாடுகளில் நடக்கவுள்ளது. கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் வரும் 16,17 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x